மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: சிகிச்சை பலனின்றி எலக்ட்ரீசியன் பலி

மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் தன்ராஜ் (வயது23). எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 11-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை- பெங்களூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தன்ராஜ் மீது நேருக்குநேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த தன்ராஜ் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக தன்ராஜ் உயிரிழந்தார்.

இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த தன்ராஜ்க்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com