நத்தம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் பலி

நத்தம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியாகினர்.
நத்தம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் பலி
Published on

நத்தம்:

சிவகங்கை மாவட்டம் நெடுவயலை சேர்ந்தவர் குழந்தைவேல் என்ற பாண்டி (வயது28). இவர் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் வழியாக மோட்டார் சைக்கிளில் நெடுவயல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது நத்தம் புதுப்பட்டியை சேர்ந்த பிரதீப் (20), தனது சகோதரி மகள் தனுஷ்கா (6) உடன் மோட்டார்சைக்கிளில் சாணார்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இரு மோட்டார் சைக்கிள்களும் உலுப்பகுடியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் குழந்தைவேல் மற்றும் தனுஷ்கா சம்பவ இடத்திலேயே உயிழந்தனர்.

படுகாயம் அடைந்த பிரதீப் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com