போடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கிறிஸ்தவ மத போதகர் பலி

போடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மதபோதகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

மேலசொக்கநாதபுரம்:

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜோய்(வயது55). கிறிஸ்தவ மத போதகர். இவர் போடி தர்மத்துப்பட்டியில் தானுஸ்ரீ என்பவரது வீட்டில் தங்கியிருந்து கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இவர் அப்பகுதியில் வழிபாட்டு நிகழ்ச்சிக்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியே போடி அமராவதி நகரை சேர்ந்த விக்னேஷ்(26) என்பவர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜோய் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ஜோய் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com