திருவாடானை அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: பெண் பலி

திருவாடானை அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்தனர்.
திருவாடானை அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: பெண் பலி
Published on

ராமநாதபுரம்:

திருவாடானை அருகே உள்ள ஆண்டிவயலைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (வயது52). இவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பேத்தியை பார்ப்பதற்காக உறவினர் கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சிங்கனேந்தல் பாலம் அருகே சென்றபோது திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலா கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த பஞ்சவர்ணம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து உறவினர் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜநளாயினி வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சாய்தானியா (30) என்பவரை கைது செய்தார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com