விழுப்புரம் அருகே விபத்து - வாகனம் மோதி பாமக பிரமுகர் பலி

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாமக பிரமுகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே விபத்து - வாகனம் மோதி பாமக பிரமுகர் பலி
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பணங்குப்பம் கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 52). பா.ம.க. பிரமுகர்.

இவர் நேற்று இரவு வளவனூரில் இருந்து பணங்குப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வளவனூர் அருகே உள்ள நல்லரசன் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரத்தினத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரத்தினம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வளவனூர் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரசு ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர்.

விபத்தில் பலியான ரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com