திண்டிவனத்தில் விபத்து- மொபட்டில் மகளுடன் சென்ற தந்தை பலி

திண்டிவனத்தில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் மகளுடன் சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

திண்டிவனம்:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 70). இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமராஜர் நகரில் தனது மகள் வீட்டிற்கு வந்து இருந்தார்.

அப்போது ஜமாலுதீனும், அவரது மகளும் வீட்டிலிருந்து டி.வி.எஸ்.மொபட்டில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் அங்குள்ள சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜமாலுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த திண்டிவனம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மோதிய காரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com