கிணற்றில் மோட்டார்சைக்கிளுடன் விழுந்து வங்கி ஊழியர் படுகாயம்

கிணற்றில் மோட்டார்சைக்கிளுடன் விழுந்து வங்கி ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

பழனி அருகே உள்ள சொக்கநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 27). இவர் தென்காசியில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவகுமார் நேற்று மோட்டார் சைக்கிளில் தனது ஊரில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார்.

சிவகிரி அருகே வெற்றிலை கொடிக்கால் மண்டபத்தின் எதிரே சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அந்த பகுதியில் உள்ள கிணற்றில் சிவகுமார் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com