தாய், மனைவி, குழந்தைகளை கொன்ற ஜவுளி வியாபாரி மீது கொலை வழக்குப்பதிவு

சென்னையை அடுத்த பம்மலில் தாய், மனைவி, குழந்தைகளை கொன்ற ஜவுளி வியாபாரி மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகளை சங்கர் நகர் போலீசார் பதிவு செய்தனர்.
தாய், மனைவி, குழந்தைகளை கொன்ற ஜவுளி வியாபாரி மீது கொலை வழக்குப்பதிவு
Published on

தாம்பரம்:

சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 39), ஜவுளி வியாபாரி. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் பல இடங்களில் கடன் வாங்கினார். கடன் தொல்லையால் விரக்தி அடைந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி தன் தாய் சரஸ்வதி (65), மனைவி தீபா (32), மகன் ரோஷன் (8), மகள் மீனாட்சி (6) ஆகியோரை தாமோதரன் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த தாமோதரன் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தாமோதரன் தற்போது அபாய கட்டத்தை தாண்டி உள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகளை சங்கர் நகர் போலீசார் பதிவு செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் தேறியவுடன் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com