ஆண் குழந்தையை விற்க முயன்ற தாய்- போலீஸ் விசாரணை

கோவை அருகே பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தையை விற்க முயன்ற தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண் குழந்தையை விற்க முயன்ற தாய்- போலீஸ் விசாரணை
Published on

கோவை:

கோவை மாவட்டம் சூலூர் மயிலம்பட்டி கரையான் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ஜெயலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 6-ந் தேதி ஜெயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 9-ந் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஜெயலட்சுமி தனது குழந்தையை விற்க முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தைகள் நலவார்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக குழந்தையின் தான் ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயலட்சுமி தனக்கு ஏற்கனவே பிறந்த குழந்தையையும் விற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பெற்ற குழந்தையை தாய் விற்க முயன்ற சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com