ஒட்டன்சத்திரம் அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தும்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் கேரளாவில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (32). இவர்களுக்கு அருந்ததி (6) என்ற மகளும், 11 மாதத்தில் அருள் அமுதன் என்ற ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். ஊரடங்கு காரணமாக சரவணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வெளியூர் சென்றார். பின்னர் நேற்று காலையில் அவர் வீடு திரும்பினார். வீட்டின் கதவை தட்டி பார்த்தபோது திறக்கப்படவில்லை. உடனே கதவை உடைத்து சரவணன் உள்ளே சென்றார். அங்கு படுக்கை அறையில் கவிதா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குழந்தை அருந்ததி அதே அறையில் தூங்கி கொண்டிருந்தாள். சமையல் அறையில் உள்ள வாளியில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை அருள்அமுதன் இறந்து கிடந்தான். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதா மற்றும் குழந்தை உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிதா எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? குழந்தையை கொலை செய்தது எதற்கு? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com