முத்தியால்பேட்டையில் தாயார் கண்டித்ததால் மகன் தூக்குபோட்டு தற்கொலை

முத்தியால்பேட்டையில் மது குடிப்பதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டையில் தாயார் கண்டித்ததால் மகன் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் கலிய மூர்த்தி. இவரது மனைவி கலைவாணி (வயது 46). இவர்களுக்கு 2 மகள், 3 மகன்கள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கலியமூர்த்தி இறந்து விட்டார்.இவரது 2-வது மகன் கலைச்செல்வன் குடிப்பழக்கம் உள்ளவர்.இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

மது குடிப்பதை தாயார் கண்டித்தார். அதையும் கேட்காமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார். தகராறு முற்றவே அவரது தாயார் மற்ற பிள்ளைகள் அனைவரையும் அழைத்து கொண்டு பக்கத்து வீட்டுக்கு தூங்க சென்றார்.

காலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் சேலையால் தூக்குபோட்டு கலைச்செல்வன் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தியால் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com