கரூர் அருகே குழந்தையுடன் தாய் மாயம்

கரூர் அருகே குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

கரூர்:

கரூர் அருகே மணல் மேட்டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). இவரது மனைவி சர்மிளா (22). இவர்களுக்கு மதுஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் செல்லாண்டி பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சர்மிளா தனது குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் முருகேசன் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து முருகேசன் தாந்தோனிமலை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் குழந்தை மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com