அம்மிக்கல்லை தலையில் போட்டு தாய் கொலை: தீக்குளித்து படுகாயம் அடைந்த மகனும் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே தாயை கொலை செய்து விட்டு, தீக்குளித்து படுகாயம் அடைந்த மகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கனேரியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (வயது 48). பீடி சுற்றும் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. மூத்த மகன் மாரிச்செல்வம் வெளியூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இளைய மகன் மணிரத்னம், இசக்கியம்மாளுடன் உள்ளூரிலே கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த இசக்கியம்மாளை அம்மிக்கல்லை தலையில் போட்டு மணிரத்னம் கொலை செய்தார்.

பின்னர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டு, தற்கொலை முயற்சி செய்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிரத்னத்தை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com