சேலத்தில் பள்ளி கட்டணம் கட்டும் தகராறில் மகளை கொன்ற தாய் சாவு

சேலத்தில் மகளுக்கு பள்ளி கட்டணம் கட்டும் தகராறில் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தில் பள்ளி கட்டணம் கட்டும் தகராறில் மகளை கொன்ற தாய் சாவு
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் வின்சென்ட் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 44). இவர், சேலம் டவுன் பகுதியில் உள்ள கூட்டுறவுத்துறை கடன் சங்கத்தில் செயலாளராக உள்ளார்.

இவரது மனைவி சிவகாமி (34). இவர்களது மகள் நாகநந்தினி (11), சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்தநிலையில், ரவிசங்கரிடம் சிவகாமி நேற்று முன்தினம் இரவு நாகநந்தினிக்கு பள்ளி கட்டணம் கட்ட பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், ரவிசங்கர் சிறிது நேரம் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது தாயும், மகளும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

இதையடுத்து நேற்று காலை மனைவி, மகள் ஆகியோர் படுக்கையில் இருந்து எழவில்லை. இதனால் மனைவி சிவகாமியை எழுப்பி ரவிசங்கர் கேட்டார். அப்போது, மகளுக்கு வி‌ஷத்தை கொடுத்துவிட்டு அதை தானும் குடித்துவிட்டதாக சிவகாமி தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிசங்கர், உடனடியாக இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி நாகநந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவகாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு சிவகாமி இறந்தார்.

இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த மனைவி பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சிவகாமி தனது மகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு அவரும் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com