மேட்டூரில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் கணவர் தற்கொலை

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் வேதனை அடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டூரில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் கணவர் தற்கொலை
Published on

மேட்டூர்:

மேட்டூர் பிட்டர் மேன் குடியிருப்பில் வசித்து வந்தவர் கமலக்கண்ணன் (வயது 36). டிரைவரான இவருக்கும் ஈரோடு சென்னிமலையை சேர்ந்த சுகன்யாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

சமீப காலமாக கணவன்-மனைவிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்து கொண்டு சுகன்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் கமலக்கண்ணன் வீடு கடந்த 31-ந் தேதி முதல் பூட்டியே கிடந்தது. இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கமலக்கண்ணன் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரித்த போது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வராததால் மன வேதனை அடைந்த கமலக்கண்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com