தஞ்சையில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை

தஞ்சையில் தாய் இறந்த சோகத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 41). பழைய இரும்பு வியாபாரி. இவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் தாய் மீது அதிகம் பாசம் உடையவராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அவரது தாய் இறந்து விட்டார். இதனால் குமார் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர். இருந்த போதிலும் அவர் சரியாக சாப்பிடாமல் சோகத்துடன் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று நள்ளிரவில் அனைவரும் தூங்கியதும் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுபற்றி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தஞ்சை கீழவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com