தாயார் இறந்த நினைவு நாளில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை

வில்லியனூரில் தாயார் இறந்த நினைவு நாளில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாயார் இறந்த நினைவு நாளில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

வில்லியனூரை அடுத்த அரியூர்பேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி பெயிண்டர். இவரது மனைவி சத்யா (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சுந்தரமூர்த்தியின் தாயார் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த சோகம் தாங்க முடியாமல் சுந்தரமூர்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

இந்த நிலையில் நேற்று சுந்தரமூர்த்தியின் தாயார் நினைவு தினம். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் உள்ள மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

இதை பார்த்த சத்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சுந்தரமூர்த்தி இறந்து போனார்.

இதுகுறித்து சத்யா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் மங்கலம் கோர்க்காடு அம்மன்நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (42 லாரி டிரைவர். இவரது மனைவி வேம்பு (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

குடிப்பழக்கம் உள்ள பார்த்திபன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

இதேபோல் நேற்றும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த பார்த்திபன் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வேம்பு கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com