வெள்ளியணை அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

வெள்ளியணை அருகே ஊர் சுற்றியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கரூர்:

கரூர் அருகே உள்ள வெள்ளியணை மணவாடி பெரியார்நகர் பகுதியைசேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் கார்த்திக் (வயது 20). எஸ்.எஸ்.எல்.சி.வரை படித்துள்ள இவர் கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதமாக கார்த்திக் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றினார். மகனின் எதிர்காலம் குறித்து கவலை அடைந்த அவரது தாயார் அவரை கண்டித்தார். இருப்பினும் கார்த்திக் வேலைக்கு செல்ல உடன்பட வில்லை. 

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்குபோட்டுதற் கொலை செய்து கொண்டார். இது குறித்து தங்கவேல் வெள்ளியணை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com