தாய் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை

போளூர் அருகே தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

போளூர்:

போளூரை அடுத்த தும்பக்காடு மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுழந்தை, கேரளாவில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி வசந்தி. இவர், ஆரணியில் பேன்சி ஸ்டோரில் வேலை செய்கிறார். இவர்களது 2-வது மகள் செவ்வந்தி (வயது 13), தும்பக்காடு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் செவ்வந்தி பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் வசந்தி, செவ்வந்தியை கண்டித்து உள்ளார். எனவே மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com