எண்ணெய் கப்பலில் உயிர் இழந்த மேலும் ஒரு இந்தியர் அடையாளம் தெரிந்தது

சார்ஜா கடல் பகுதியில் எண்ணெய் கப்பலில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 இந்தியர் பலியான நிலையில் மேலும் ஒரு இந்தியர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எண்ணெய் கப்பல் தீ விபத்து
எண்ணெய் கப்பல் தீ விபத்து
Published on

துபாய்:

சவுதி அரேபியா, சார்ஜா கடல் பகுதியில் சென்ற ஒரு எண்ணெய் கப்பலில் கடந்த ஜனவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் பலியானார்கள்.

ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது ஏற்கனவே அடையாளம் தெரிந்தது. தற்போது மேலும் ஒரு இந்தியர் பலியாகி இருப்பது தெரியவந்து உள்ளது. அவருடைய பெயர் முகமது அப்பாஸ் அன்சாரி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். மரபணு பரிசோதனையின் மூலம் அன்சாரியின் உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொளஞ்சி தங்கவேல் என்பவர் இந்த விபத்துக்கு பிறகு என்ன ஆனார் என்று இதுவரை தெரியவில்லை

X

Maalai Malar
www.maalaimalar.com