காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு ராணுவ தளபதி மலரஞ்சலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் படைகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஆந்திர மாநில ராணுவ வீரரின் உடலுக்கு ராணுவ தளபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு ராணுவ தளபதி மலரஞ்சலி
Published on

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தளுப்புரெட்டி கிருஷ்ணா ரெட்டி என்பவர் வீர மரணம் அடைந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் டெல்லி கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் உயரதிகாரிகள் இன்று மாலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் அனுப்பப்பட்ட அவரது உடல் விமானம் மூலம் இன்றிரவு எட்டு மணியளவில் ஐதராபாத் நகரை வந்தடைகிறது. அங்கிருந்து ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓபுலாபுரத்துக்கு கோண்டு செல்லப்பட்டு, நாளை இறுதி சடங்குகள் நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com