பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் நிதி மந்திரிஅருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா அஞ்சலி
அமித்ஷா அஞ்சலி
Published on

புதுடெல்லி:

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அருண் ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் நிதி மந்திரிஅருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பா.ஜ.க.வினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com