300 விக்கெட் வீழ்த்திய 5-வது தென்ஆப்பிரிக்கா வீரர் மோர்னே மோர்கல்

ஆஸ்திரேலியா எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 300 விக்கெட் வீழ்த்திய 5-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சிறப்பை மோர்னே மோர்கல் பெற்றார்.
300 விக்கெட் வீழ்த்திய 5-வது தென்ஆப்பிரிக்கா வீரர் மோர்னே மோர்கல்
Published on

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுன் நியூலேண்டு மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிஸ்சிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி 97.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 311 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 141 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் பால் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும், மைகேல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இரண்டாம்  நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 67 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்னி மார்கல் 4 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும், பிலெண்டர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 301 ஆக (85 டெஸ்ட்) உயர்ந்தது. டொனால்டு, ஷான் பொல்லாக், நிதினி, ஸ்டெயின் ஆகியோருக்கு பிறகு 300-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க பவுலர் என்ற சிறப்பை மோர்கல் பெற்றார். 33 வயதான மோர்கல் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com