ஓய்வு முடிவில் மோர்னே மோர்கல்: இங்கிலாந்து தொடருக்குப்பின் ஆலோசிப்பேன் என்கிறார்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இங்கிலாந்து தொடர் முடிந்த பின்னர் இதுகுறித்து ஆலோசிப்பதாகவும் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
ஓய்வு முடிவில் மோர்னே மோர்கல்: இங்கிலாந்து தொடருக்குப்பின் ஆலோசிப்பேன் என்கிறார்
Published on

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் மோர்னே மோர்கல். உலகளவில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். 32 வயதாகும் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை செய்வதாக கூறியுள்ளார். இங்கிலாந்து தொடர் முடிந்த பின்னர், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் ஆலேசனை செய்த பின், தனது நிலை குறித்து முடிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மோர்னே மோர்கல் கூறுகையில் ‘‘நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவடையப் போகிறது.

2019-ம் உலகக்கோப்பை தொடருக்கான அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். அந்த திட்டத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கப்போகிறேனா?.

இளம் வீரர்கள் அணிக்கு வருவதற்கு என்னால் உதவ முடியும் என்றால், அதை நான் செய்வேன். என்னைப் பொறுத்த வரையில் இந்த தொடரில்தான் முழுக்கவனம் செலுத்த போகிறேன். பின்னர் தென்ஆப்பிரிக்கா திரும்பிய பின்னர், எப்படி செல்கிறது என்று பார்ப்பீர்கள்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com