மக்கள் பிரார்த்தனைகளால் நான் விரைவாக குணமாகினேன் - மனோகர் பாரிக்கர்

எனக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை விட மக்களின் பிரார்த்தனைகளால் தான் விரைவில் குணமாகினேன் என கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். #GoaCM #ManoharParrikar
மக்கள் பிரார்த்தனைகளால் நான் விரைவாக குணமாகினேன் - மனோகர் பாரிக்கர்
Published on

பனாஜி:

கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மனோகர் பாரிக்கர். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, கோவா மற்றும் மும்பை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற அவர் கடந்த மாதம் சிகிச்சை முடிந்து திரும்பி வந்தார். ஆனாலும், உடல்நிலை காரணமாக எந்த நிகழ்ச்சியிலும் பாரிக்கர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், கோவாவில் நேற்று நடந்த பெண்கள் பேரணியில் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 

உடல்நலக் குறைவால் நான் நோய் வாய்ப்பட்டிருந்த நேரம். எனது மன தைரியம் மற்றும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் நான் குணமடைந்து விட்டேன்.

ஆனால், உண்மையான காரணம், எனது நலனில் அக்கறையுள்ள பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் உண்மையான பிரார்த்தனையே. அவர்களது பிரார்த்தனையால் தான் நான் விரைவில் குணமாகி உங்கள் முன் நிற்கிறேன். எனது நலனுக்காக பிரார்த்தனை செய்த இங்கு கூடியுள்ள பெண்கள் அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். #GoaCM #ManoharParrikar

X

Maalai Malar
www.maalaimalar.com