மோடியை டுவிட்டரில் பின்தொடரும் 60 சதவிகித கணக்குகள் போலி - ஆய்வில் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் பின்தொடர்பவர்களில் 60 சதவிகிதம் பேரின் கணக்குகள் போலியானவை என்னும் தகவல் தெரியவந்துள்ளது. #PMModi #FakeTwitterfollowers
மோடியை டுவிட்டரில் பின்தொடரும் 60 சதவிகித கணக்குகள் போலி - ஆய்வில் தகவல்
Published on

பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் பின்தொடர்பவர்களில் 60 சதவிகிதம் பேரின் கணக்குகள் போலியானவை என்னும் தகவல் தெரியவந்துள்ளது.

டுவிட்டரில் உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்குகளை பின்தொடர்பாளர்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் பின்தொடர்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சோதனை செய்து உள்ளது. அந்த ஆய்வின் முடிவில் அரசியல் தலைவர்களில் பிரபலமானவர்கள் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்கள் அதிகம் போலி முகவரி கொண்ட கணக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
 


அதிலும் குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களில் 60% கணக்குகள் போலியானவை என தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பின்தொடர்பவர்களில் 69% பேரின் கணக்குகள் போலியானவை எனவும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவை பின்தோடர்பவர்களில் 67% பேரின் கணக்குகள் போலியானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ டுவிட்டரில் பின் தொடர்பவர்களில் 26% பேரின் கணக்குகள் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com