

ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இறுதியாக கடந்த 1963-ம் ஆண்டு வெடித்தது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இது மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இப்போதே அதில் இருந்து அதிக அளவிலான புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகங் எரிமலையை சுற்றி இருக்கும் 12 கிலோமிட்டருக்கு உட்பட்ட இடங்களில் தங்கியிருந்த 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிக்காமல் இருக்க வேண்டி அங்கு பொதுமக்கள் சிறப்பு பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் எரிமலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலி தீவில் தென்பசார் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது அங்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.