மேலும் 3 தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துகிறது

ஆரோக்யா பாலை தொடர்ந்து மேலும் 3 தனியார் நிறுவனங்கள் நிலைபடுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. #MilkPriceHike
மேலும் 3 தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துகிறது
Published on

தமிழகத்தில் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் (ஆரோக்யா பால்) கடந்த 1-ந்தேதி முதல் நிலைபடுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் வாகன எரிபொருள், மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவினங்களின் உயர்வின் காரணமாக தற்போது தங்களின் பாலுக்கான விற்பனை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

அதன்படி கரூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்ட “வி.கே.ஏ. பால்” நிறுவனம் “ஆசை பால்” நிறுவனம் ஈரோட்டை தலைமையிடமாக கொண்ட “அமிர்தா பால்” நிறுவனம் ஆகியவையும் தங்கள் நிறுவனத்தின் நிலைபடுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எனவே தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com