புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் சுவரில் துளைபோட்டு ரூ.2½ லட்சம் கொள்ளை

புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் சுவரில் துளைபோட்டு ரூ.2½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். #Tasmac #MoneyRobbery
புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் சுவரில் துளைபோட்டு ரூ.2½ லட்சம் கொள்ளை
Published on

ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.

இன்று மதியம் கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது சுவற்றில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் நள்ளிரவில் கொள்ளையர்கள் மதுபான பாருக்குள் புகுந்து டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். #Tasmac #MoneyRobbery

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com