கொங்கணாபுரத்தில் இரும்பு கடையில் திருட்டு

கொங்கணாபுரத்தில் இரும்பு கடையில் பணம் திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

எடப்பாடி:

எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 42). இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொங்கணாபுரத்தை அடுத்த ரங்கம்பாளையம் பகுதியில் சோமசுந்தரம் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த மர்ம நபர், சோமசுந்தரம் மனைவி விபத்தில் சிக்கி கொண்டதாகவும், உடனடியாக உங்களை வரச் சொன்னார்கள் என்று கூறியுள்ளார். இதை நம்பிய சோமசுந்தரம் பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்டு மர்ம நபர் இரும்பு கடை கல்லாவில் இருந்த ரூ.8 ஆயிரத்தை திருடி சென்று விட்டார். வீட்டில் இருந்து கடைக்கு திரும்பி வந்தபோது பணம் திருட்டு போனது சோமசுந்தரத்துக்கு தெரியவந்தது. இதுபற்றி அவர் கொங்கணாபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com