பணத்தை தவற விட்டதால் லாரி உரிமையாளர் தற்கொலை

தொட்டியம் அருகே பணத்தை தவற விட்டதால் மனமுடைந்த லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
பணத்தை தவற விட்டதால் லாரி உரிமையாளர் தற்கொலை
Published on

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கவரப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன்(24). இவருக்கு 2 லாரிகள் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி மாநிலத்துக்கு சென்ற லாரி விபத்தில் சிக்கி செலவு செய்ததால் கடன் சுமை ஏற்பட்டு சோகத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சரவணன் லாரியில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை தவற விட்டார். இதனால் மேலும் மனமுடைந்த அவர் நேற்று மாலை தொட்டியம் தாலுக்கா அலுவலகம் அருகில் தனது லாரியை நிறுத்தி விட்டு வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 

உடனே அக்கம் பக்கதினர் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார். 

இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com