

நத்தம்:
நத்தம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். (வயது 27). கார் டிரைவராக இருந்தார். சம்பவத்தன்று இரவு ரமேஷ் நத்தம் அவுட்டர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அவரை வழி மறித்தார். மேலும் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இரவு நேரம் என்பதால் இது குறித்து யாருக்கும் தெரியவில்லை.
படுகாயமடைந்த ரமேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். படுகாயமடைந்த ரமேசை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியில் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (27) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது.
சம்பவத்தன்று இரவு இது குறித்து தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகேசன் ரமேசை குத்திக்கொன்று உள்ளார். போலீசார் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.