பெரியகுளம் அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி - போலீசார் விசாரணை

பெரியகுளம் அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த நபர் குடும்பத்துடன் மாயமானார். புகாரின் பேரில் மாயமான செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி - போலீசார் விசாரணை
Published on

தேனி:

பெரியகுளம் அருகே அட்டணம்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் அழகிரிசாமி (வயது 65). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 35) என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அழகிரிசாமி செந்தில்குமாரிடம் 1 லட்சம் மதிப்புள்ள 3 ஏலச்சீட்டுகள் போட்டு கடந்த 16 மாதங்களாக பணம் கட்டி வந்துள்ளார்.

செந்தில்குமாரிடம் தன்னுடைய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் செந்தில் குமார் பின்பு தருவதாக கூறி அவரை அலைக்கழித்துள்ளார்.

சம்பவத்தன்று செந்தில் குமாரிடம் பணத்தை கேட்பதற்காக அழகிரிசாமி சென்றுள்ளார். ஆனால் அவர் குடும்பத்துடன் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரிக்கும்போது இது போன்று பல நபர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அழகிரிசாமி தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாயமான செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com