திருச்சி: ரெயில்வே அதிகாரி மீது பெண் ஊழியர்கள் பாலியல் புகார்

திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரி மீது பெண் ஊழியர்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி: ரெயில்வே அதிகாரி மீது பெண் ஊழியர்கள் பாலியல் புகார்
Published on

திருச்சி:

திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை பிரிவில் கேங்மேனாக கேரளாவை சேர்ந்த பபிதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு நேற்று 18 கேரளாவை சேர்ந்த பெண் கேங்மேன்களுடன் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

கடந்த 3-ந்தேதி ஒணம் பண்டிக்கைக்கு விடுமுறை கேட்பதற்காக இருப்பு பாதை பிரிவு பெறியாளர் மணிவண்ணன் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு அவர் இல்லாததால் அவரது வீட்டிற்கு சென்றேன்.

அப்போது அவர் என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். மேலும் என்னையும் மற்ற பெண் ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் பேசுகிறார் என புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கேரள பெண்கள் அதிகமாக கேங்மேனாக பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் மொத்தமாக ஒரே நாளில் விடுமுறை எடுத்ததால் பணிகள் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் திட்டியதாக ஏற்கனேவே புகார்கள் வந்துள்ளன. அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மணிவண்ணன இருப்புப் பாதை பொறியியல் பிரிவு எஸ்.ஆர்.எம்.யூ. சங்கத்தின் திருச்சி கோட்ட தலைவராக இருந்து வருகிறார். தொழிற் சங்கத்தினரிடையே நடக்கும் கோஷ்டி மோதல் காரணமாக பொய் புகார் அளிக்கபட்டு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

ரெயில்வே அதிகாரி மீது பெண் ஊழியர்கள் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com