இமாசலப்பிரதேசம் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி இன்று பிரசாரம்

இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இமாசலப்பிரதேசம் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி இன்று பிரசாரம்
Published on

சிம்லா:

இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் வரும் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜ.க. சார்பில் முதல் மந்திரி வேட்பாளராக முன்னாள் முதல் மந்திரி பிரேம்குமார் துமால் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாசலப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கங்ரா மாவட்டத்தில் உள்ள பதேபூர் தொகுதியில் காலை 11.30 மணிக்கும், தவுலா கான்  பகுதியில் உள்ள பாண்டா சாகிப்பில் மதியம் 2.30 மணிக்கும் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார். இதேபோல் நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளிலும் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆதரவு திரட்டுகிறார்.

இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஏற்கனவே 6 முறை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். மேலும் உனா மற்றும் கங்ரா மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார கூட்டங்களில் நவம்பர் 5-ம் தேதி பங்கேற்கிறார் என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com