’எனது நண்பர் நெதன்யாகுவுக்கும் அற்புதமான இஸ்ரேல் மக்களுக்கும் நன்றி’ - பிரதமர் மோடி டுவிட்

சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்த இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு-நரேந்திரமோடி
நெதன்யாகு-நரேந்திரமோடி
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், ‘எனது நல்ல நண்பரான இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும், வியக்கத்தகு இந்தியாவின் அனைத்து

மக்களுக்கும் மகிழ்ச்சிகரமான சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பெருமைகொள்ள பல உள்ளன’ என இந்திய சுதந்திர வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்த இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த எனது நண்பர் நெதன்யாகுவுக்கும் அற்புதமான இஸ்ரேல் மக்களுக்கும் நன்றி. இந்தியா மீதான இஸ்ரேல் பிரதமரின் சிறப்பான அன்பு தெளிவாக காணப்படுகிறது. 

இஸ்ரேலுடன் அதிகத்துவரும் வலுவான உறவுகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com