ஆந்திர மக்களின் பணத்தை திருடிய மோடி அம்பானிக்கு கொடுத்து விட்டார் - ராகுல் குற்றச்சாட்டு

ஆந்திர மக்களுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியை தொழிலதிபர் அம்பானிக்கு பிரதமர் மோடி கொடுத்து விட்டதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #ChandrababuNaidu #AnilAmbani #RahulGandhi
ஆந்திர மக்களின் பணத்தை திருடிய மோடி அம்பானிக்கு கொடுத்து விட்டார் - ராகுல் குற்றச்சாட்டு
Published on

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்றுவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ ப்ரெயென், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அவரது கோரிக்கை  வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.

எனவே, எங்கள் அரசு அளித்த வாக்குறுதியை இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு எங்களது முழுமையான ஆதரவு உண்டு’ என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் ஒரு பொய்யைப்பேசி வருகிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறிமாறி செல்லும் அவர் பொய்களை மாற்றி மாற்றிப் பேசுகிறார். ஆந்திராவுக்கு போகும்போது சிறப்பு அந்தஸ்து பற்றி பொய் பேசுகிறார். அவரது நம்பகத்தன்மை முற்றிலுமாக அழிந்துப்போய் விட்டது.

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியை தொழிலதிபர் அம்பானிக்கு பிரதமர் மோடி கொடுத்து விட்டார்’ என குறிப்பிட்டுள்ளார். #ChandrababuNaidu #Modistole #AnilAmbani #RahulGandhi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com