தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற்றதற்கு ஊடகங்களின் பங்கு அளப்பரியது: பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றி பெற செய்ததில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற்றதற்கு ஊடகங்களின் பங்கு அளப்பரியது: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பா.ஜ.க. சார்பில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தீபாவளி மிலன் என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெற செய்ததில் ஊடகங்களின் பங்கு மிகவும் அளப்பரியது.

மேலும், அரசியல் கட்சிகளின் ஜனநாயகம் பற்றி மக்கள் இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் பலர் பிரதமர் மோடியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com