தனக்காக இரண்டு விமானங்களை ரூ.16 ஆயிரம் கோடிக்கு வாங்கிய மோடி, ஏர் இந்தியாவை விற்றுவிட்டார்: பிரியங்கா காந்தி

நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்த நிலையில், டாடா குழுமம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
பிரியங்கா
பிரியங்கா
Published on

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா'வை வாங்கும் ஏலத்தில் 'டாடா' நிறுவனம் வெற்றி பெற்றது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை, டாடா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. 61 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சமாளிக்க, அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா மீண்டும் டாடா நிறுவனத்திடம் கைமாறுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஏர் இந்தியாவை விற்பனை செய்த விவகாரத்தில் மோடி மீது விமர்சனம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில் ‘‘பிரதமர் மோடி கடந்த ஆண்டு தனக்காக இரண்டு விமானங்களை 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். தற்போது அவர் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏர் இந்தியாவையும் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கோடீஸ்வர நண்பர்களுக்கு விற்றுள்ளார்’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com