

போபால்:
ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் அரசின் உதவியுடன் குறைந்த செலவில் வீடு கட்டுவதற்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) என்ற திட்டம் பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்பதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.
2022-க்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதுடன், 2 கோடி வீடுகளை கட்டுவது இதன் நோக்கமாகும். அதன்படி அனைத்து மாநிலங்களிலும் பிஎம்ஏஒய் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த வீடுகள் அனைத்தும் தற்போதைய சவாலான கொரோனா பெருந்தொற்று காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.