மக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி

அதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

அப்போது மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை தெரிவித்தார்.

இதுகுறித்து மோடி பேசுகையில் ‘‘மக்கள் தொகை பெருக்கம் ஒரு கட்டுபாடற்ற வேகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த மக்கள் தொகை பெருக்கம் நமக்கும், வரவிருக்கும் சந்ததியினருக்கும் எண்ணில் அடங்கா பிரச்சனைகளை உருவாக்கும்.

ஒருவர் தனது குடும்பத்தை சிறியதாக வைத்திருப்பதும் ஒருவகை நாட்டுப்பற்றுக்கான செயல்தான். நாம் மரியாதை கொடுக்க அவர்கள் தகுதியானவர்கள். அதேபோல் பாராட்டுக்குரியவர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com