ஜார்க்கண்ட் முதல்வராகும் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றிபெற்று விரைவில் முதல்வராக பதவியேற்கவுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Published on

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றிபெற்று அம்மாநிலத்துக்கு சேவையாற்றவுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துக்கள்!

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பல ஆண்டுகள் சேவையாற்றும் வாய்ப்பை பாஜகவுக்கு அளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்களை பாராட்டுகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com