மொடக்குறிச்சி அருகே விபத்தில் வாலிபர் பலி

மொடக்குறிச்சி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் கவுரிசங்கர் (வயது 22). இவர் சோலார் பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது அவருடைய மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுரிசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com