எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது - ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதம்

எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டில் சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். #MLAsDisqualification
எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது - ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதம்
Published on

சென்னை:

தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேராலும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இதையடுத்து இந்த வழக்கை 3-வது நீதிபதி சத்திய நாராயணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.

18 பேரும் முதல்-அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்தது தீவிரமான குற்றமாகும். அவர்களது செயல் கட்சி தாவல் தடைச் சட்டத்துக்கு எதிரானது. அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு உத்தரவிட, சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று அவர் வாதிட்டார். இதையடுத்து முதல்-அமைச்சர் சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி தன் வாதத்தை தொடங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com