சசிகலாவால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன்

சசிகலாவால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறி உள்ளார்.
சசிகலாவால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன்
Published on

அ.தி.மு.க. அம்மா அணியில் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனம் செல்லாது என்றும், எனவே தினகரனால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் நியமனமும் செல்லாது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

சசிகலாவால் தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றால் அவரது நியமனங்கள் எதுவும் செல்லாது என்று தானே அர்த்தம். எனவே அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் தாங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து விலக வேண்டும்.

3500 பொதுக்குழு உறுப்பினர்களை கேட்காமல் வெறும் 75 உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு எடப்பாடி அணியினர் தீர்மானம் நிறைவேற்றியது எப்படி செல்லுபடியாகும்?

இவ்வாறு தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com