மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்: ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறி விட்டது- ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் ஜெயலலிதா ஆசை நிறைவேறி உள்ளதாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்: ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறி விட்டது- ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.
Published on

மதுரை:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் ஜெயலலிதா ஆசை நிறைவேறி உள்ளதாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் அம்மா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

எய்ம்ஸ் அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை தோப்பூரில் உள்ளது என்றும் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளிடமும் கோரிக்கை வைத்தார்.

இப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசை நிறைவேறி விட்டது.

நாட்டின் முக்கிய நகரமாக மதுரையும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. எய்ம்ஸ் அமைக்க உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #AIIMS

X

Maalai Malar
www.maalaimalar.com