ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை- மு.க.ஸ்டாலின் தாக்கு

டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கும் நெல், தொடர் மழையால் முளைத்து வரும் அவலத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின்
திமுக தலைவர் முக ஸ்டாலின்
Published on

டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் குவியல், குவிலாக தேங்கி கிடக்கும் நெல், தொடர் மழையால் முளைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை.

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து முளைக்கும் அவலம்.

காவிரி காப்பாளர் பட்டம் மட்டும் போதுமா? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது முதல்வருக்கு தெரியாதா?

உடனடி நடவடிக்கை தேவை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com