சேலத்தில் கலப்பு திருமணம் செய்த தொழிலாளி மர்ம மரணம்

சேலத்தில் கலப்பு திருமணம் செய்த தொழிலாளி மர்மமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலத்தில் கலப்பு திருமணம் செய்த தொழிலாளி மர்ம மரணம்
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45) தொழிலாளி. காதல் கலப்பு திருமணம் செய்த இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அவர் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பாண்டியனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று பாண்டியன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.

இதைப்பார்த்த உறவினர்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடலை மீட்டு போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். மேலும் இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com