முருங்கப்பாக்கத்தில் சுவீட் கடைவேலைக்கு சென்ற பெண் மாயம்

முருங்கப்பாக்கத்தில் சுவீட் கடை வேலைக்கு சென்ற பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

அரியாங்குப்பம்:

முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 34), தொழிலாளி. இவரது மனைவி சுதா (30), அரியாங்குப்பம் புறவழிச் சாலையில் உள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற சுதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சுவீட் கடைக்கு சென்று விசாரித்தபோது சுதா வேலைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com