மதுரையில் கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்- கடத்தப்பட்டார்களா?

மதுரையில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மாய மானார்கள். அவர்கள் கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையில் கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்- கடத்தப்பட்டார்களா?
Published on

மதுரை:

மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன். இவரது மகள் ஜெனிபர் ஷிமா (வயது 21). அந்தப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த 9-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற ஜெனிபர் ஷிமா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார். அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் தாரணி (19). இவர் நத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த 8-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற தாரணி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி திருமால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ரேவதி (23), இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கருப்பையா திண்டுக்கல் சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரேவதியை காணவில்லை.

இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com